1. பெருஞ்செல்வ யோகம்:
இலக்னாதிபதி 2ல் இருக்க, 2க்குடையவாட 11ல் இருக்க, 11க்குடையவர் லக்னத்திலிருக்கப் பெற்ற கோள் அமைப்பு மிகுந்த செல்வ யோகத்தை ஏற்படுத்தும்.
இவ்வமைப்புப் படி விருச்சிக லக்னமாகி அதில் 11க் குடைய லக்னாதிபதி செவ்வாய் 2ல் இருக்க , 2க் குடைய குரு 11ல் இருப்பது செல்வ யோகத்தைத் தரலாம். இதில் செவ்வாய் 6க்குடையவராகவும் உள்ளார். புதன் 8க்குடையவராகவும் உள்ளார். எனவே இவ்வமைப்புப்படிமற்ற லக்னங்களுக்கும் 1,2,11 க்குடையவாடகளுக்கு மற்றொரு தீயபாவக ஆதிபத்யம் ஏற்படலாம். அதையும் நினைவில் கொண்டு அப்பாவக அமைப்புப் படியும் பெருஞ்செல்வ யோகப் பலன் ஏற்படும்.
குறிப்பு : இவ்வமைப்பின் படி ஏற்படும் கோள்கள் நிலையில் 11ம் பாவக அதிபதி லக்னத்தில் நீசம் அடையும் நிலை மேச லக்னத்திற்கு ஏற்படும். அதே போல் துலாம் லக்னத்திற்கு 11 ம் பாவக அதிபதி சூரியன் லக்னத்தில் நீசம் அடையும் தன்மை ஏற்படும் . இவை இரண்டும் சுமாரான செல்வ யோகங்களை ஏற்படுத்தும். இவை போல் மற்ற லக்னங்களிலும் கோள்களின் உச்சம்,சமம் , பகை போன்ற அமைவுப்படி பலன்களை பிரித்துக் கொள்க.
தனது கடுமையான முயற்சியினால் பொருள் சேரும் யோகம்:
2. இலக்னாதிபதி வலிமையான கோளாகயிருந்து. அக்கோள் குருவுடன் சேர்ந்து கேந்திரத்திலிருக்க 2ம் பாவக அதிபதி வைசேகிகாம்சத்தில் இருந்தால் கடுமை முயற்சியில் பொருள் சேரும்.
குறிப்பு : இலக்னாதிபதி வலிமையான கோளாக இருக்க முடியும். எக்கோளும் குருவுடன் இணைந்து கேந்திரத்தில் இருக்க முடியும். ஆனால் 2ம் பாவக அதிபதி வைசேசிகாம்சத்தில் இருக்க வேண்டும் என்பது மிகவும் அரிதான அமைப்பாக அமையும். இலட்சத்தில் ஒரு சாதகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, 2ம் பாவக அதிபதி வைவெசிகாம்சம் பெற்றாலே கடுமையான முயற்சியால் பொருள் சேரும் என்பதை முக்கிய கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.
3. இலக்னாதிபதி நின்ற நவாம்ச அதிபதி வலிமையான கோளாக இருந்து, அக்கோள் 2ம் பாவ அதிபதிக்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருந்தாலும் அல்லது அக்கோள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் தன் முயற்சியினால பொருள் தேடும் அமைப்பு ஏற்படும்.
குறிப்பு: இவ்வமைப்பு பல சாதகங்களுக்கு ஏற்படலாம். ஏனெனில் கேந்திரம், திரிகோணம், ஆட்சி, உச்சம் பெறும் அமைப்பு என்பதால் ஆகும்.
4. இலகடனாதிபதி இருக்கின்ற ராசிக்கு கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ 2ம் பாவக அதிபதி இருந்தாலும் அல்லது 2ம் பாவக அதிபதி நற்கோளாகயிருந்து ஆட்சியோ, உச்சமோ பெற்றாலும் அல்லது உச்சம் பெற்றகோளுடன் 2ம் பாவக அதிபதி கூடி இருந்தாலும் தனது முயற்சியினால் பெருஞ்செல்வம்
குறிப்பு: இப்பாடலில் மூன்று விதி அமைப்பு ஏற்படுகிறது. முதல் அமைப்பில் 2ம் பாவக அதிபதி கேந்திர திரிகோணம் பெறவேண்டும். 2வது அமைப்பில் 2ம் பாவக அதிபதி நற்கோளாக இருந்து ஆட்சியோ உச்சமோ பெற வேண்டும். 3வது அமைப்பில் 2ம் பாவக அதிபதி உச்;சம் பெற்ற என்று கூறப்பட்டுள்ளது. இக்கருத்துக்களின் படி முதல் அமைப்பில் 2ம் பாவக அதிபதி தீய பாவகமான 6,8,12 ல் இருந்தாலும் அவை லக்னாதிபதி நின்ற ராசிக்கு கேந்திர வாய்ப்பு ஏற்படும் என்பதாகிறது. மற்ற இரண்டு அமைப்பும் நன்றாக விளங்குகிறது. இவை போல் பல சாதகங்கள் உலகில் உள்ளன.
5. இளம் வயதில் செல்வம் சேரும் யோகம்:
இரண்டாம் பாவக அதிபதியும் 10ம் பாவக அதிபதியும் இணைந்து இலக்ன கேந்திரத்திலிருக்க (1,4,7,10) இக்கோள்களை இல்கன அதிபதி கோள் நின்ற நவாம்ச அதிபதி கோள்பார்க்க இளமையில் செல்வஞ்சேரும் அமைப்பாக இருக்கும்.
குறிப்பு: இலக்ன கேந்திரமான 10ல் தன அதிபதி சூரியனும், 10ல் பாவக அதிபதி செவ்வாயும் சேர்ந்துள்ளது. இக்கோள்களை நவாம்சதில் சந்திரன் நின்ற ராசி அதிபதியான குரு 7 ம் பார்வையாக பார்வை செய்கிறார். இவை போல் அனைத்து இலக்னங்களுக்கும் கோள்கள் அமைப்பு ஏற்படலாம். துன அதிபதியும் 10 ம் பாவக அதிபதியும் இணைந்து எப்பொழுதும் பணம் தேடும் எண்ணத்தையே ஏற்படுத்தும். இவ்வமைப்பு பெற்ற கோள்கள் லக்ன கேந்திரத்திலிருப்பது மிகவும் உத்தமம். ஆனால் லக்னாதிபதி நின்ற நவாம்ச அதிபதியின் பார்வை பெற வேண்டும் என்ற கூற்று ஆய்வாக எடுத்துப்பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.
6. நடுவயதில் செல்வ யோகம்:
இரண்டி;றகுடையவர் காலபலம் பெற்று (சட்பல கணிதத்தில்) இலக்உ அதிபதியுடன் இணைந்திருக்க, இலாபாதிபதியும் (11க்குடையவர்) கேந்திர, திரிகோண இராசிகளில் இருந்து நற்கோளால் பார்க்கப்பட்டால் நடுவயதில் செல்வ யோகம் ஏற்படும்.
குறிப்பு: தன அதிபதி காலபலம் பெற்று 11 க்குடைய வரும் நற்கோள்களால் பார்க்கப்பட வேண்டும் என்பது இப்பாடலின் சிறப்பு அம்சமாகும். காலபலத்தில் சந்திரன், செவ்வாய், சனி ஆகியோர் இரவில்வலுவுடையவர்கள் . சூரியன், குரு, சுக்கிரன் பகலில் வலுவுiடையவர்கள். புதன் எப்பொழுதும் வலுவுடைய கோளாகும். தீயகோள்கள் தேய்பிறையிலும், நற்கோள்கள் வளர்பிறையிலும் வலுவுடையவர்கள் ஆவர்.
7. முதுமை வயதில் செல்வ யோகம்:
இலக்னாதிபதியும் , 2ம் பாவக அதிபதியும் இணைந்து நற்கோளின் இராசியில் இருக்க, அவர்கள் இருக்கும் இராசியதிபதி லக்னத்தில் இருக்க முதுமை வயதில் செல்வ யோகம் ஏற்படும்.
குறிப்பு: லக்கனாதிபதியும்,தன அதிபதியும் நற்கோள்கள் வீட்டில் இணைந்திருக்கும் அமைப்பு ஏற்படக் கூடியது. ஆனால் இவர்கள் இருக்கும் இராசி அதிபதி லக்னத்தில் இருக்க வேண்டும் என்பது சில சாதகங்களுக்குத் தான் ஏற்பட முடியும். எனில் தற்காலத்தில் பலர் முதுமை வயதில் நன்றாக வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கெல்லாம் மேற்படி கோள் அமைப்பு இருக்க வாய்ப்பில்லை. வேறு அமைப்பே இருக்க முடியும்.
8. உடன்பிற்பபுகளினால் செல்வம் சேருதல்:
இலக்னாதிபதியும் 2ம் பாவக அதிபதியும் இணைந்து 3ம் பாவகத்திருக்க, இக்கோள்களை நற்கோள்கள் பார்க்க உடன் பிறப்பினால் செல்வம் ஏற்படும்.
குறிப்பு : 1,2 க்குடையவர்கள் 3 ம் பாவகத்திலிருந்து நற்;கோள்களால் பார்க்கப்பட்டால் என்று கூறுவதால் 3 ம் பாவகத்திற்குரிய இளைய உடன்பிறப்பு மூலம் செல்வம் சேரும் என்று எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
9. தாயின் மூலமாக செல்வம் சேருதல்:
2 க்குடையவரும், 4 க்குடையவரும் இணைந்து இருந்தாலோ அல்லது ஒருவதையொருவர் பார்த்துக் கொண்டாலோ தாயின் மூலமாக செல்வம் சேரும்.
குறிப்பு: 4 ம் பாவகம் தாயிற்கு காரகமாக வருவதால் கூறப்படுகிறது. 4 ம் பாவகம் உறவினர்கள் என்று தற்பொழுது கூறப்படுவதால் தாயுடன் பிறந்த அல்லது தாய்வழி உறவினர்கள் மூலமாக செல்வம் சேருவதற்கும் வாய்ப்புள்ளது.
10. குழந்தைகள் மூலமாக செல்வம் சேருதல்:
2 க்குடையவரும், 5 க்குடையவரும் இணைந்திருக்க அல்லது இலக்னாதிபதியும், குருவும் வைசேசிகாம்சத்தில் இருந்தால் தனது குழந்தைகள் மூலமாக செல்வம் சேரும்.
குறிப்பு: 2க் குடையவரும், 5க் துடையவரும் இணைந்திருக்கும் அமைப்பு வலசாதகங்களில் காண முடியும். ஆனால் குருவும், இலக்க அதிபதியும் வைசேசிகாம்சத்திலிருக்க வேண்டும் என்பது கடினமான அமைப்பாகும்.
11. மனைவி மூலம் செல்வம் சேருதல்:
இலக்னாதிபதியும், சுக்கிரனும் வலிமையுடன் இருந்து 2க் குடையவர் 7 க்குடையவருடன் இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தாலோ மனைவியின் மூலமாக செல்வம் சேரும்.
குறிப்பு: தற்காலத்தில் மனைவி மூலமாக செல்வம் சேரும் அமைப்பு பெரும்பாலான இல்லங்களில் காண முடிகிறது. எனவே மேற்கூறிய ஒரே கருத்து பல சாதங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். வேறு அமைப்புகளும் இருக்கலாம். அதனால் 2ம் பாவக அதிபதி 7ம் பாவகத்துடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறார் என்று ஆய்வு செய்து முடிவுகளை தெரிவியுங்கள்.
12. பகைவர் மூலம் செல்;வம் சேருதல்:
2க் குடையவர் வலுவுடன் இருந்து 6க்குடையவருடன் இணைந்திருந்தாலோ அல்லது செவ்வாயும், இலக்ன இதிபதியும் வலிமையுடன் வைசேசிகாம்சத்திலிருந்தாலும் பகைவர்கள் மூலம் பொருள் வந்தடையும்.
குறிப்பு: 2,6 க்குடையவர் இணைவு பகைவர் மூலம் பொருளட சேரும் என்ற கருத்து ஏற்புடையதாகும், தற்காலத்தில் இவை அனைத்துட் வழக்குகளினாலும், வட்டிக்கு கடன் கொடுத்து தொழில் நடத்துபதினாலும், முரட்டுத் தனமாகபட பேசி பணம் பெறுவதினாலும் பொருள் சேரும் வாய்ப்புகளும் உள்ளது. செவ்வாயும், இலக்ன அதிபதியும் வைசேசிகாமசம் பெறுவது அரிதான ஒன்றாகும்.
13. அதிகமுயற்சி இன்றி செல்வம்சேரும் யோகம்:
இலக்னாதிபதியும் 2 க்குடையவரும் பரிவர்த்தனை பெற்றால் அதிக முயற்சி இன்றி பொருள் சேரும்.
குறிப்பு: எவ்வளவு பெரிய யோகமாக இருந்தாலும் செல்வ யோகத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் 2 க்குடைய கோள் வலிமைடயுடன் இருந்தாலே மேற்கூறப்பட்டுள்ள செல்வ யோகங்கள் நன்றாக ஏற்படும். அப்படி இல்லாமல் 2 க்குடையவர் தனது நீசப் பாகையை நோக்கிச் சென்றால் செல்வம் ஏற்படும் தன்மையும் மிகவும் குறைவாகவே ஏற்படலாம்.
|