தச விகித பொருத்த அமைப்புகள் |
திருமணத்தை சோதிட சாத்திரத்தின்படி செய்யலாம் என்ற எண்ணம் உருவாகியபோது அநேகருக்கு ஜாதகம் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இப்பத்து பொருத்த விதியை ஏற்ப்படுத்தியவர், நட்சத்திரங்களுக்கு எழுத்துக்களை கொடுத்திருக்கின்றனர். இதன்படி ஆண்,பெண் இருவருடைய பெயரின் முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை குறிக்கின்றதோ இதநடி;பபடையிலேயே பெயர்கள் சூட்டுகிறார்கள், நிச்சயமாக இப்பத்து பொருத்தவிதியும், 200 ஆண்டுகளுக்குள்ளேயே ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் வாழ்ந்தவர்கள், அந்நட்சத்திர எழுத்தி;ன்படி பெயர் வைத்ததாக செய்திகள் இல்லை. திருமணம் செய்ததாகவும் வரலாறுகள் இல்லை. திருமணம் செய்ததாகவும் வரலாறுகள் இல்லை. அதில் தற்போது 40 ஆண்டுளுக்குள்ளேயோ அல்லது 50 ஆண்டுகளுக்குள்ளோயோ இப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது அதிகரித்து வந்துள்ளது. ஆதலால் இதில் கூறப்படுகிற உண்மையான விதிகளும் அதற்குரிய விதிவிலக்குகளும் இங்கு தரப்படுகிறது.
1.தினப் பொருத்தம் (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
தினப் பொருத்தம் என்பது நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் கூறும் அமைப்பாகும். ஓருவருக்கு தன்னுடைய நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் பகை
இரண்டாவது நட்சத்திரம் செல்வம்
4வது நட்சத்திரம் சுகம்
5வது நட்சத்திரம் மனகிலேசம்
6வது நட்சத்திரம் அனுகூலமான பலன்கள்
7வது நட்சத்திரம் வதம் மற்றும் மரணம்
8வது நட்சத்திரம் நட்பு
9வது நட்சத்திரம் பரம நட்பு
இதனடிப்படையிலேயே அடுத்து வரக்கூடிய 9 நட்சத்திரங்களுக்கும் எண்ணி கணக்ககீட்டுக் கொள்ளவேண்டும். பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக்கண்ட ஆண் நட்சத்திரம் 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆகிய நட்சத்திரங்கள், உத்தமமான தினப்பொருத்தம் உள்ள நட்சத்திரமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 12வது நட்சத்திரத்தின் முதல் பாதமும், 14வது நட்சத்திரத்தின் 4வது பாதமும, 16வது நட்சத்திரத்தினட 3ம் பாதமும் இல்லாமல் மற்ற பாதங்கள் இருகடகுமேயானால், தினப்பொருத்தம் மத்தியமாக உண்டு. 22வது நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 27வது ஆக வந்து ஒரே ராசியில் இருக்குமானால் உத்தமம், வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.
விதவை வைநாசிகம்
பேண் நட்சத்திரத்திற்கு 7வது புருஷ நட்சத்திரமானால் வதம். ஆண் நட்சத்திற்கு 22வது பெண் நட்சத்திரமானால் வைநாசிகம் இவை முறையே
1.கார்த்திகை – ஆயில்யம் 2.ஆயில்யம் - சுவாதி
3.சித்திரை – பூராடம் 4.அனுஷம் -அவிட்டம்
5.அவிட்டம் - பரணி 6. சுதயம் - கார்த்திகை
இந்த ஆறு ஜோடி நட்சத்திரங்களுக்கும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை தரக்கூடியது ஆகும்.
திருவாதிரை – உத்திரம்;; : பூரம் -அனுஷம் : பூசம் -சித்திரை திருமணம் செய்தால் சுகபலன்களை தரும். புனர்பூசம் - பூசம் வம்ச விருத்தியாகும். ரோகிணி-மகம், பூரட்டாதி-ரோகிணி திருமணம் ஆனால், சந்தான சமிர்த்தியை செய்யும் . உத்தராடம் -ரேவதி , போக பாக்கியங்கள் அதிகமாகும். மூலத்திற்கும் - பூரட்டாதிக்கும் ஜஸ்வர்யம் பெருகும். புரணி –பூசம் சௌபாக்கியம் உண்டு. அஸ்தம் -மூலம் தரித்திர யோகம் வரும். அசுபதி –புனர்பூசம், சுவாதி –உத்திராடம் திருமணமானால், பெண் குழந்தை பெறும், கலம் வரும். மகம் -விசாகம் திருமணம் ஆனால் பிள்ளை இல்லை. விசாகம் -திருவோணம் சக்களத்தி வரும் திருவோணம் - அசுபதி பிரிந்துபோவார்கள். உத்திரட்டாதி –மிருகசீரிடம் வைதவியம் உண்டு.
ஏக நட்சத்திர பொருத்தம்
ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம் , விசாகம் , திருவோணம், உத்திரட்டாதி , ரேவதி ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் மேலேகூறிய நட்சத்திரங்கள் ஒன்றாக இருந்தால் உத்தம பொருத்தம் உண்டு. ஆண், பெண் இருவருக்கும் பூரம்,அசுபதி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம் , பூசம் , பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம் இவை ஒரே நட்கத்திரமாக வந்தால், மத்திம பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம். புரணி, ஆயில்யம் ,சுவாதி, கேட்டை மூலம்,அவிட்டம் , சதயம், பூரட்டாதி இவைகள் ஒரே நட்சத்திரமானால் பொருத்தமில்லை.
விசேஷ விதிகள்
பரணி, மிருகசீரிடம், ஆயில்யம், அஸ்தம், பூராடம், சதயம், இந்த ஆறும் தம்பதிகளுக்கு ஒரே நட்கத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம், என்று சிலர் கருதுகிறார்கள். இரண்டு ராசிகள் கூடின நட்கத்திரத்திற்கும் (கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை,விசாகம், உத்திராடம் , அவிட்டம், பூரட்டாதி) ஒலே நட்சத்திரம் திருமணம் செய்ய வந்தால், ஆண் நட்சத்திரம் முன்னால் உள்ள ராசியிலும், பெண் நட்கத்திரம் அதற்கு அடுத்த உள்ள ராசியிலும் இருந்தால் சுபம். பேண் ராசி முதலாவது: ஆண் ராசி அடுத்த ராசியாகவும் இருந்தால் பொருத்தம் இல்லை.
ஏக இராசி
ஒரே ராசியில் ஆண், பெண் நட்சத்திரம் வந்தால், ஆண் நட்சத்திரம் முதலாவதாகவும், பெண் நட்சத்திரம் பித்தியதுமானால் நல்லது. பேண் நட்கத்திரம், முந்தியும், ஆண் நட்சத்திரம் பிந்தியதுமாக இருந்தால் ஆகாது. ஒரே ராசியிலே பரணி, கார்த்திகை, ப+சம் , ஆயில்யம், அவிட்டம் , சதயம், இதன்படி ஆண், பெண் இருவருக்கும் இருந்தாலும், பெண் நட்சத்திரம் முந்தியதாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.
விசேஷ விதி:
ஆண்,பெண் இருவருக்கும் மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்திருந்தால். தசப் பொருத்தங்களிலே ஒன்றும் இல்லாவிட்டாலும், நட்சத்திர ஆதிகடகத்தினாலே திருமணம் செய்யலாம். (ஆண் மூலம், அரசாளும் , கன்னி மூலம் நிர்மூலம்) என்று இருந்த வழக்குச்சொல் இன்றைய சோதிடர்களிடம் தவறான உச்சரிப்பை பெற்றுள்ளது. எப்படி எனில் ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று கூறுகிறார்கள். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் குடும்பம் செல்வமிழந்து போகும் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும தவறான கருத்தாகும். ஏதோ ஒருவருக்கு நடந்த துன்பத்தை அனைத்துப் பெண்களுக்கும் கூறுவது சோதிட சாஸ்திரத்தையே வெறுப்படைய வைப்பதாகும். எத்தனையோ மூல நட்சத்திரப் பெண்க்ள கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. ஆண் மூலம் என்பது ஆனி மாதம் வரக்கூடிய மூல நட்சத்திரம் பௌர்ணமியை ஒட்டியே வருவதால், அதில் சுபகாரியங்கள் செய்யலாம் என்றும் க்னனி என்பது புரட்டாசி மாதம் ஆகும். இம்மமாதத்தில் வரக்கூடிய மூல நட்கத்திரம் அஸ்டமியை ஒட்டி வருவதால், சுபகாதியங்களுக்கு ஆகாது என்று கூறுவதள்கு ஏதுவாகNவு மேற்கண்ட பாடல் எழுத்ப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு மொழியில் இப்பாடல் பெண் மூலம் நிரிமூலம் என்று கூறப்பட்டுவிட்டது. இதுவே பெண்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்டமாகும். சோதிடர்கள் இக்கூற்றை முதலில் தவிர்க்க வேண்டும். மேலும் வில விதி விலக்குகள்
1. பெண்பிற்கு மூலம் முதல் பாதமானால், மாமனார்களுக்கு ஆபத்தாகவும்
2. ஆயில்யம் முதல் பாதமானால், மாமியார்க்கு ஆபத்து என்றும்
3. கேட்;டை முதல் பாதமானால், மூத்த மைத்துனர்க்கு ஆபத்து
4. வுpசாகம் 4ம் பாதமானால், சிறிய மைத்துனர்க்கு ஆபத்து என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்காலத்தில் ஒவ்வோரு நட்சத்திரத்திலும் சுமார் 11 கோடி;ககுமேல் பெண்கள் இருக்கிறார்கள். இவர்க்ள கூறும் இந்த பாதத்தின் அடிப்படையில் தீங்கு நேரிட்டிருக்கும் என்று ஆய்வு செய்தால், பெரும்பாலும் நாம் தோற்றுத்தான் போவோம். ஆகவே, மேற்கண்ட கருத்து ஆய்வுக்கு உட்பட்டதே அன்றி உண்மையானது அல்ல. ஏற்புடையதும் அல்ல. சோதிடர்கள் மேலே சொன்ன பாத பிரிவுகளைக்கூட மறந்து, அந்த நட்சத்திரத்தில் பிறந்தாலே தோசம் என்று கூறிவிடுகிறார்கள். இது எப்படி சரியான முடிவாகும்? உண்மையில் ஜாதகமே இல்லாதவர்க்கு பொருத்தம் பார்க்கும் விசயத்தில் இக்கூற்றுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதே நல்லது. அதுவே, எதிர்கால சந்ததியினருக்கு சோதிடத்தில் நம்பிக்கை ஊட்டக் கூடியதாக இருக்கும்.
2. கணப்பொருத்தம் (மங்களம்)
குணம் மூன்று வகையாக பிரிக்கலாம். இது குணத்தின் அடிப்படையாக பிரித்ததாக சொல்லலாம். தேவகணம்- சாத்வீக குணமுடையது. ராகஷஸகணம் -ராகஷஸ குணத்தையுடையது. மானுஷ கணம் - தமோ குணத்தையுடையதாக இருக்கும். இதில் ஆண்,பெண் இருவருக்கும் ஒரே கணமாக இருப்பது. மிகவும் உத்தமான கணப் பொருத்தமாகும். முhறி இருப்பதில் தேவ- மானுஷ கணம் மத்திம கணப் பொருத்தத்தை தருகின்றது. தேவ –ராகஷஸ என்பது அதம கண பொருத்தத்தை தருகிறது. இதில. பெண் தேவ கணமாகவும், ஆண் ராகஷஸ கணமாக இருந்தால் திருமணம் செய்யலாம். இதனடிப்படையில் கண்ப பொருத்தம் உண்டென்ற முடிவுக்கு வரலாம். 1. மானுஷ கணம், ராகஷஸ கணமும் சேர்க்கக்கூடாது 2. பெண்ணின் நட்சத்திரம் ராகஷஸ கணமான இருந்து அது ஆணின் நட்சத்திரத்திற்கு 14க்கு மேல் இருந்தால், கணப் பொருந்ததில் தோஷமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
3. மாகேந்திரப் பொருத்தம்(சம்பத்து விருத்தி):
27 நட்கத்திரங்களுக்குள் 4 ஆன கேந்திர நடசத்திரங்களே மாகேந்திர நட்சத்திரங்களாகும். இதில் பெண் நட்சத்திரம் முதலாக எண்ணி கண்ட ஆண் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 ஆகவந்தால் மாகேந்திர பொருத்தம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இப்பொருத்தம் வயதையும் சுகங்களையும் விருத்தி பண்ணுவதற்காக பார்க்கப்படுவதாகவும், ஆனால் இப்பொருத்தம் பெரும்பாலான தினப்பொருத்தம் உள்ள நட்சத்திர தம்பதியினருக்கு இருப்பத்றகு வாய்ப்பில்லை. ஏனெனில், இதில் கூறப்பட்டுள்ள 4வது மற்றும் 12வது நட்சத்திரமும் தினப்பொருத்தம் உடையதாக இருக்கும். மற்ற மாகேந்திர நட்சத்திரங்கள் தினப்பொருத்தத்தில் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. இம்மாகேந்திர பொருத்தம், அதிக குழந்தைகயை கொடுப்பதாகவே கூறப்படுகிறது இப்பொருத்தம் இல்லாவிடின் திருமணம் செய்யலாம்.
4. ஸ்திரி தீர்க்கம்(சகல சம்பத்து விருத்தி):
பேண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக்கண்ட ஆண் நட்சத்திரம்,13க்கு மேல் இருக்க வேண்டும் . அதாவது பெண் ராசியிலிருந்து 6 ராசிகளுக்கு மேல் ஆண் ராசி இருக்க வேண்டும். என்ற கருத்தின் அடிப்படையில் இப்பொருத்தம் பிரிக்கப்பட்டுள்ளது. சிலர் 7 நட்சத்திரத்திற்கு மேல் இருந்தாலே திருமணம் செய்யலாம் என்று கூறுகிறார்கள் இப்பொருத்தத்தினால் குடும்பத்தில் நியாயமான செலவுகள் ஏற்பட்டு, பணத்தை சேமிக்கும் தன்மையை, ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
5. யோனிப் பொருத்தம் (அன்னியோன்ய நட்பு)
அசுபதி ஃ சதயம் - குதிரை
பரணி ஃ ரேவதி - யானை
கார்த்திகை ஃ பூசம் - ஆடு
ரோகிணி ஃ மிருகசீரிடம் - பாம்பு
திருவாதிரை ஃ மூலம் - நாய்
புனர்பூசம் ஃ ஆயில்யம் - பூனை
மகம் ஃ பூரம் - எலி
உத்திரம் - எருது அல்லது பசு
அஸ்தம் ஃ சுவாதி - எருமை
சித்திரை ஃ விசாகம் - புலி
அனுஷம் ஃ கேட்டை - மான்
பூராடம் ஃ திருவோணம் - குரங்கு
உத்திராடம் - கீரி
அவிட்டம் ஃ பூரட்டாதி - சிங்கம்
உத்திரட்டாதி - பசு
மேலே கூறப்படுகிற மிருகங்களின் குண இயல்புகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும். இதில் ஆண் மிருகம், பெண் மிருகம் என்று பிரித்து ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகும் இருக்கவேண்டுமென்று கூறுவது தவறானதாகும். இதில் ஆண், பெண் என்றே பேச்சிற்கே இடமில்லை. மேலும் மிருகங்களுடைய குறிகளின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கவேண்டியதில்லை, மிருகங்களின் குண இயல்புகள் நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு. பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மிருகம் பகை
குதிரை எருமை
யானை சிங்கம்
ஆடு குரங்கு
பாம்பு கீரி
நாய் பூனை
பூனை எலி
எலி பாம்பு
புலி பசு
மான் நாய்
யானை சிங்கம்
இதில், காலப் பிரகாசிகாவில் அவிட்டமும், பூரட்டாதியும் சிங்க யோனி;க்குப் பதிலாக மனுஷ யோனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திராட நட்சத்திரத்திற்கு கீரி யோனி இல்லாமல்;, பசு யோனி என கொடுக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய யோனிகளின் அடிப்படையிலேயே அவை ஒன்றுக்கொன்று பகை என்று கூறப்படுகிறது. இதை விடுத்து புலி என்றால் அனைத்து மிருகங்களையும் அடித்து சாப்பிடும் என்று கருதி, மான் , நாய் இவைகளுக்கும் எதிரி என்று கூறப்பட்டுள்ளது. இது கிரந்தங்களில் காணப்படவில்லை. ஆகவே, பசுவுக்கு புலி மட்டுமே எதிரியாகும். அதன்படி பொருத்தம் பார்க்கவேண்டும். ஆண், பெண் இருவருக்கும் ஒரே யோனியாக இருந்தால் உத்தமமாகவும், பகை இல்லாமல் இருந்தால் உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது. பகை யோனிகளாக இருந்தால் பொருத்தம் இல்லை.
6. இராசி பொருத்தம் (வம்ச விருத்தி)
1. பெண் இராசிக்கு 6 இராசிகளு;ககு மேல் ஆணுடைய இராசியாக இருக்கவேண்டுமென்று கூறுகிறது. பெண் இராசியிலிருந்து ஆண் இராசி 2ஆம் இராசியாக இருக்கக்கூடாது. இது மரணத்திற்கு ஒப்பான கண்டங்களைத் தரும் மாறி இருப்பின், அதாவது ஆண் இராசிக்கு பெண் இராசி இரண்டாவதாக இருந்தால், தீர்க்காயுசு உண்டு.
2. பெண் இராசிக்கு மூன்றாவது இராசி ஆண் இராசியானால், துக்கம் அதிகரிக்கும், ஆண் இராசிக்கு 3வது இராசியாக பெண் இராசி இருக்கலாம்.
3. பெண் இராசிக்கு 4வது இராசி ஆண் இராசியானால், குடும்பத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும்.
4. பெண் இராசிக்கு 5வது இராசியாக ஆண் இராசி இருந்தால் வைதவ்யம்
5. பெண் இராசிக்கு 6வதாக ஆண் இராசி இருந்தால், குழந்தைகளுக்கு கேடு என்று கூறப்பட்டுள்ளது.
6. மேஷத்திற்கும், சிம்மத்திற்கும் , கடகத்திற்கும் , விருச்சிகத்திற்கும் 5, 9வது இராசி என்றால் தோஷமில்லை.
7. குடும்பத்திற்கும், சிம்மத்திற்கும், கடகத்திற்கும், மகரத்திற்கும் சம சப்தமானாலும், தோஷம் இருக்கின்றது.. திருமணம் செய்யக்கூடாது.
மேஷம் -கன்னி : தனுசு – ரிஷபம்: துலாம்- மீனம்: கும்பம் - கடகம்: சிம்மம் - மகரம்: மிதுனம் - விருச்சிகம் இவைகளுக்கு சஷ்டாங்கமாக தோசம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இப்படி இருந்தால், இவருக்கும் திருமணம் செய்யலாம்.
7 இராசி அதிபதிப் பொருத்தம் (சந்ததி விருத்தி):
இராசி அதிபதி கிரகம்
மேஷம் ஃ விருச்சிகம் - செவ்வாய்
ர்pஷபம் ஃ துலாம் - சுக்கிரன்
மிதுனம் ஃகன்னி - புதன்
மீனம் ஃ தனுசு - வியாழன்
மகரம் ஃ கும்பம் - சனி
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
இதன்படியே, இராசிகளும் அதிபதிகள் ஆகின்றார்கள்.
கிரகம் பகை சமம் நட்பு
சூரியன் - சுக், சனி, ராகு, கேது புதன் -சந்,செவ், குரு
சந்திரன் - ராகு, கேது செ, வி,சு,சனி - சூரியன், புதன்
செவ்வாய் - புத, ராகு, கேது சுக், சனி - சூரி , சந், வியா
புதன் - சந் செ,வி,சனி,ராகு, கேது - சூரி,சுக்
வியாழன் - புத, சுக் சனி, ராகு, கேது செவ், சூரி, சந்
சுக்கிரன்- சூரி, சந் செவ், வியா - புத, சனி, ராகு, கேது
சனி - சூரி. சந், செவ் குரு - புத, சுக், ராகு கேது
இராகு -சூரி.சந்,செவ், கேது புதன், குரு - சனி, சுக்
பெண் இராசிக்கு, ஆண் இராசி நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருந்தால், இராசி அதிபதிப் பொருத்தம் உண்டு. பெண் இராசிக்கு, ஆண் இராசி பகையாக இருந்து , ஆண் இராசிக்கு, பெண் இராசி பகையில்லாமல் இருந்தால் பொருத்தம், மத்திமம் இருவருக்கும் பகை இராசிகளாக இருந்தால், இராசி அதிபதிப் பொருத்தம் இல்லை.
8. வசிய பொருத்தம் (அன்னியோன்யம்)
இராசி - வசியமான இராசி
மேஷம் - சிம்மம்,விருச்சிகம்
ர்pஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம் - மகரம்
கன்னி - ரிஷபம், மிதுனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்
இதனடிப்படையில், ஆண், பெண் இருவருக்கும் இராசிகள் இருந்தால், வசியப்பொருத்தம் உண்டு.
9. ரஜ்ஜூ பொருத்தம் (தீர்க்க சுமங்கலியாக இருத்தல்):
எண் ரஜ்ஜூ நட்சத்திரங்கள்
1. தலை மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
2. கழுத்து ரோகிணி, அஸ்தம், திருவோணம்,
(ஆரோகணம்)திருவாதிரை.சுவாதி,
சதயம்(அவரோகணம்)
3. வயிறு (அல்லது) உதரம்-கார்த்திகை, உத்திரம், உத்ராடம், (ஆரோகணம்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (அவரோகணம்)
4. தொடை பரணி, பூசம், பூராடம் (ஆரோக்கணம்) பூசம் ,
அனுஷம், உத்திரட்டாதி(அவரோகணம்)
5. பாதம் அசுபதி, மகம், மூலம்(ஆரோகணம்) ஆயில்யம்,
கேட்டை , ரேவதி(அவரோகணம்)
ஆண் , பெண் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக இருந்தால். ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை. தலை மற்றும் கழுத்து ரஜ்ஜூ நீங்கலாக மற்ற மூன்று ரஜ்ஜூகிளிலும் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்து, ஒன்று ஆரோகணமாகவும், மற்றொன்;று அவரோகணமாக இருந்தால் , திருமணம் செய்யலாம். ஆண், பெண் இருவருக்குட் ரஜ்ஜூகள் மாறி இருந்தால், ரஜ்ஜூ பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம்.
10. வேதைப் பொருத்தம் ( துக்;கம் நீங்குதல்)
நட்சத்திரங்களுக்குள் விரோத தன்மையுடன் கூடிய எதிரிடை நட்சத்திரங்கள், வேதை என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் வேதை நட்சத்திரம், அதனுடைய 8வது ராசியில் இருக்கும் நட்சத்திரத்தையே எதிர்க்கிறது. இப்பொருத்தம் பெண்ணின் நட்கத்திரத்தை முதலாவதாக் கொண்டே பார்க்கப்பட வேண்டும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், இந்த மூன்று நட்சத்திரங்களும் ஒருவருக்கு ஒருவர் வேதை நட்சத்திரங்களாக உள்ளனர்.
நட்சத்திரம் வேதை நட்சத்திரம்
அசுபதி கேட்டை
பரணி அனுஷம்
கார்த்திகை விசாகம்
ரோகிணி சுவாதி
திருவாதிரை திருவோணம்
புனர்பூசம் உத்திராடம்
பூசம் பூராடம்
ஆயில்யம் மூலம்
மகம் ரேவதி
பூரம் உத்திரட்டாதி
உத்திரம் பூரட்டாதி
அஸ்தம் சதயம்
இதன் அமைப்பில் ஆண்,பெண் இருவருக்கும் வேதை நட்சத்திரங்களாக இருந்தால்;, இப்பொருத்தம் இல்லை என்று கூறப்படுகிறது. வேதை இல்லாமல் இருந்தால் நல்ல பொருத்தம் என்று கூறப்படுகிறது.
விதி 1:
இதுவரை விவாதித்த, பத்து பொருத்தங்களில் , தினம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய இவை ஜந்தும் மிக முக்கிறமானவை என்று கூறப்படுகிறது. இதில் ரஜ்ஜூ மிகவும் முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து பொருத்தங்களில் ஜந்திற்கு மேலிருந்தால், உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பலவிதப் பொருத்தங்கள் கூறப்பட்டிருந்தாலும் , மேற்படி பொருத்தங்களின் அமைப்பிலேயே முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
விதி 2:
சில நூல்களில் ரஜ்ஜூ ஒரு பொருத்தமாக இருந்து , மற்ற பொருத்தங்கள் இல்லாவிடினும்,திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
விதி 3:
ஆண், பெண் இருவருக்கும் அவர்களுடைய இராசி அதிபதிகள் ஒருவராகவோ, நண்பர்களாகவோ அல்லது 7வது இராசிகளாகவோ இருபடபார்கலேயானால், இப்பொருத்த்தில் ரஜ்ஜூ, வேதை, கணம் , மற்றும் யோனி ஆகிய இந்த நான்கு பொருத்தங்களும் இல்லாவிடினும் திருமணம் செய்யலாம், என்று கால விதானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை ஜாதகச் சந்திரிகாவிலும் காணமுடியும்.
விளக்கம்:
மேஷ இராவி அசுபதிக்கும், சிம்ம இராசி மகத்திற்கும் ஒரே பாத ரஜ்ஜுவாகவே உள்ளது. இதில் ரஜ்ஜூ தட்டுகிறது. ஆனால், இருவருடைய இராசி அதிபதிகள் நண்பர்களாக இருப்பதால், திருமணம் செய்யலாம் என்று ரஜ்ஜூ தோஷம் இல்லை. என்றும் மேற்படி நண்பர்களாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்ற முடிவு மேற்படி நண்பர்களாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்ற முடிவு மேற்படி காரணத்தினால் தெளிவாக விளங்குகிறது. ஆகையால், திருமணப் பொருத்தத்தை பொருத்தவரை அதனுடைய பங்கு சில விதி விலக்குகளுடன் ஆண்,பெண் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்ற முடிவை கருதியே எழுதப்பட்டுள்ளது.
|