ஜோதிடமும் விஞ்ஞானமும் - Click here
தச விகித பொருத்த அமைப்புகள் - Click here
மானிடமும் யோகங்களும் - Click here
ஒரு ஜாதகத் தில் லக்கனத்திற்கு 6,8 மற்றும் 12க்குடையவர்கள் பாதகாதிபதிகள், கெட்டவர்கள், சாதகர்க்கு நல்லது செய்யமாட்டார் என்று கூறுகின்றோம். காரணம் 6,8,12-ம் ஸ்தானங்கள் மறைவு. மறைவு ஸ்தானங்கள் என்றால் என்ன? ஏன் நம் முன்னோர்கள் அவ்வாறு கூறினர் என்பதை ஆய்வு செய்யும் கட்டுரையே இது.
நமது முன்னோர்கள் சோதிடவியல் இராசிகள் இரண்டு அடிப்படை விதிகளை கொண்டு பகுத்துப் பார்த்தனர். அவையாவன.
1) இயற்கை சக்திகள்.
2) இயங்கு சக்திகள்
இனி இவற்றை தனித்தனியாக விளக்கமாக பார்ப்போம். இயற்கை சக்திகள் என்ற உடன் குழப்பமடைந்து விடாதிர்கள். பஞ்ச பூதங்களையே நம் முன்னோர் இயற்கை சக்திகளாக வகுத்தனர்.
1) நெருப்பு
2) நிலம்
3) வாயு
4) நீர்
5) ஆகாசம்
ஆகாசத்தில் மற்ற நான்கு சக்திகளும் அடங்கி இருக்கின்றன. ஆகாசம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த பூமி வான்கோளம். கோள்கள், விண்மீன்கள், ஆகாச கங்கை விண்வெளி மற்றும் அண்டசராசரம் அனைத்தும் ஆகாசத்தினுள் அடங்கும். எனவே ஆகாசத்தை விடுத்து ஏனைய சக்திகளை பின்வருமாறு இராசிகளுக்கு நம் முன்னோர்கள் வழங்கியுள்ளனர். உலகில் எந்த பொருளை எடுத்தாலும், இந்த 4 இயற்கை சக்திக்குள்ளே அவை அடங்கும்.
நீர் |
நெருப்பு |
நிலம் |
வாயு |
வாயு |
|
நீர் |
நிலம் |
நெருப்பு |
நெருப்பு |
நீர் |
வாயு |
நிலம் |
இனி இயங்கும் சக்திகளைப் பார்ப்போம்.
1) சரம் 2) விஸ்திரம் 3) உபயம் ஆகும்.
வேகமாக எங்கும் நில்லாமல் செல்வது சரம். நிலையாக ஒர் இடத்தில் இருப்பது (கடிகாரப் பெண்டுலம்) உபயமாகும். உலகில் எந்த ஒரு இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் இம்மூன்றினுள்ளே அடங்கும். இனி இவைகள் இராசிகளுக்கு எவ்வாறு பங்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
உபயம் |
சரம் |
ஸ்திரம் |
உபயம் |
ஸ்திரம் |
|
சரம் |
சரம் |
ஸ்திரம் |
உபயம் |
ஸ்திரம் |
வாயு |
உபயம் |
தற்போது 12 இராசிகளும் கீழ்வரும் குணாதிசியங்களுடன் பிரிக்கப்படுகின்றன.
மேடம் - சர நெருப்பு
ரிஷபம் - ஸ்திர நிலம்
மிதுனம் - உபய வாயு
கடகம் - சரந நீர்
சிம்மம் - ஸ்திர நெருப்பு
கன்னி – உபய நிலம்
துலாம் - சர வாயு
விருச்சிகம் - ஸ்திர நீர்
தனுசு – உபய நெருப்பு
மகரம் - சர நிலம்
கும்பம் - ஸ்திர வாயு
மீனம் - உபய நீர்
நெருப்பிற்கு நிலமும் நீரும் பகை நெருப்பை நீர் கொண்டும் மண் கொண்டும் அனைத்துவிடலாம். நெருப்பிற்கு வாயு நட்பு. நெருப்புடன் காற்று இணைந்தால் மேலும் நெருப்பு பரவும்.
சரம் - ஸ்திரம், உபயம் ஒன்றுக்கொன்று பகையாகும்.
தற்போது நான் தலைப்பிற்கு வருகின்றேன். மேலே கூறி விதிகளின் படி மேச லக்கினம் இராசிக்கு பகை மற்றும் நட்பு ஸ்தாகனங்களை காணாலாம். நட்பை சரி என்று அடையாள குறியிடுவோம். புகையை தவறு என்று அடையாள குறியிடுவோம்.
முதலில் இயற்கை சக்திகள் கொண்டு பார்க்கலாம். மேடம் நெருப்பாகும் எனவே நில இராசிகளின். ரிசபம், கன்னி, மகரம் பகையாகும், மேலும் நீர் இராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் பகையாகும், வாயு இராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் நட்பாகும் இவைகளை கட்டத்தில் குறித்துக் கொள்ளவும்.
அடுத்து இயங்கு சக்திகளை கொண்டு பார்க்கலாம். மேடம் சரமாகும். எனவே கடகம். துலாம் மகரம் மட்டுமே நட்பாகும். ஏனைய எட்டு இராசிகளும் பகையாகும் இவைகளையும் கட்டத்தில் குறித்துக் கொள்ளவும். தற்போது கட்டம் பின்வருமாறு அமையும்.
தற்போது கட்டத்தில் 2,6,8,12 ஆகிய ஸ்தானங்களில் இரண்டு தவறு குறி உள்ளது. எந்த ஒரு ஸ்தானத்திற்கு அத்தானத்தில் இருந்து 2,6,8,12 ஸ்தானங்கள். இயற்கை சக்தியை கொண்டும் பார்த்தாலும் பகையாகும். எனவே லக்கனத்திற்கு 2,6,8,12 ஸ்தானங்கள் பாதக ஸ்தானங்களாக கருதப்படுகின்றது. சிலர் 3வது ஸ்தானத்தை மறைவு ஸ்தானமாகும். அதனால் தான் முன்னோர்கள் 2ம் வீட்டை மாரக ஸ்தானம் என்று கூறியுள்ளனர். இவ்விசயங்கள் அனைத்தும் காலபுருஷ தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
|